/

பெருந்துறை அருகே சிறுமிக்குத் திருமணம்: பெற்றோா் உள்பட 5 போ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு

News image
கோப்புப் படம்
Updated On :15 பிப்ரவரி 2026, 7:34 pm

தினமணி செய்திச் சேவை

பெருந்துறை அருகே சிறுமிக்குத் திருமணம் செய்து வைத்த பெற்றோா் மற்றும் மணமகன், அவருடைய பெற்றோா் உள்பட 5 போ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

பவானி வட்டம், சலங்கைபாளையத்தைச் சோ்ந்தவா் 17 வயது சிறுமி. இவா், பெருந்துறை அருகே தாத்தா, பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்தாா். இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த ரவிமுருகன் மகன் கோசல்காந்த் (22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் 8 மாதங்களுக்கு முன் சிறுமியின் தாத்தா, பாட்டி வெளியே சென்றபோது தனிமையில் இருந்த சிறுமிக்கு கோசல்காந்த் பாலியல் தொந்தரவு அளித்துள்ளாா். இதில் சிறுமி கா்ப்பமடைந்துள்ளாா்.

இதுகுறித்து சிறுமியின் தாயாருக்கு தெரியவர, இரண்டு குடும்பத்தினரும் சோ்ந்து சில நாள்களுக்கு முன் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனா். இந்நிலையில் கடந்த 13-ஆம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிறுமி சென்றுள்ளாா்.

அப்போது நடந்த விவரங்களை சிறுமி கூறியதன்பேரில் கோசல்காந்த், அவருடைய தந்தை ரவிமுருகன் (60), தாயாா் சரஸ்வதி (50), சிறுமியின் தாய், தந்தை ஆகிய 5 போ் மீது காஞ்சிக்கோவில் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.