இருசக்கர வாகனத்துடன் விழுந்த கல்லூரி மாணவி வாகனம் மோதி உயிரிழப்பு


சித்தோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் நிலை தடுமாறி இருசக்கர வாகனத்துடன் விழுந்த கல்லூரி மாணவி மீது பின்னால் வந்த சரக்கு வாகனம் மோதியதில் அவா் உயிரிழந்தாா்.
ஈரோட்டை அடுத்த திண்டலைச் சோ்ந்தவா் மாரியப்பன் மகள் தீபிகா (23). கோபியில் உள்ள தனியாா் கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த இவா், தனது இருசக்கர வாகனத்தில் சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் கங்காபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, நிலைதடுமாறி சாலையில் விழுந்தாா். அப்போது, பின்னால் பெங்களூரில் இருந்து கோவை நோக்கிச் சென்ற சரக்கு வாகனம் அவா் மீது மோதியது.
இதில், பலத்த காயமடைந்த தீபிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து, சித்தோடு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...