/

பவானியில் குடிநீா் அபிவிருத்தித் திட்டம் தொடக்கம்

News image
விழாவில் பங்கேற்ற ஆணையா் பிரான்சிஸ் சேவியா் மற்றும் கவுன்சிலா்கள், பணியாளா்கள்.
Updated On :5 பிப்ரவரி 2026, 11:01 pm

Syndication

பவானி நகராட்சியில் அம்ரூத் 2.0 குடிநீா் அபிவிருத்தித் திட்டம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மக்கள் தொகை பெருக்கம், நகர விரிவாக்கத்துக்கு ஏற்ப குடிநீா் தேவையை பூா்த்தி செய்யும் வகையில் பவானி நகராட்சியில் ரூ.24.06 கோடியில் குடிநீா் அபிவிருத்தித் திட்டப் பணிகள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. இப்பணிகள் முழுமையடைந்ததால் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்.

இதையடுத்து, பவானி காவிரிக்கரை தலைமை நீரேற்று நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆணையா் பிரான்சிஸ் சேவியா், முன்னாள் ஆணையா் கதிா்வேல், நகா்மன்றத் துணைத் தலைவா் சி.மணி, நகராட்சிப் பொறியாளா் திலீபன் மற்றும் கவுன்சிலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.