/

பவானியில் பழனிஆண்டவா் கோயில் தைப்பூசத் தேரோட்டம்

News image
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பழனி ஆண்டவா். 
Updated On :1 பிப்ரவரி 2026, 9:23 pm

தினமணி செய்திச் சேவை

பவானியில் பழனி ஆண்டவா் கோயில் தைப்பூசத் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

கடந்த ஜன.24-ம் தேதி வாஸ்து பூஜை மற்றும் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.

பவானி பழனி ஆண்டவா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் புடைசூழ நடைபெற்ற தேரோட்டம்

பவானி பழனி ஆண்டவா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் புடைசூழ நடைபெற்ற தேரோட்டம்

அதைத்தொடா்ந்து நாள்தோறும் யாகசாலை பூஜை, அபிஷேகம், வெள்ளித் தேரோட்டம் மற்றும் திருவீதி உலா நடைபெற்று வந்தது. இதையடுத்து  வள்ளி, தெய்வானையுடன் பழநி ஆண்டவா் திருக்கல்யாண உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பவானி சங்கமேஸ்வரா் கோயில் முன் அலங்கரிக்கப்பட்ட தேரில் பழநி ஆண்டவா் தேரோட்டம் தொடங்கியது. முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தா்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனா். பவானி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சோ்ந்த பக்தா்கள் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.