கோபி அருகே உள்ள சுள்ளிக்கரடு முனியப்பச்சி சுவாமி கோயில் சித்திரைத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற இக்கோயிலில் குழந்தை வரம், வியாபாரம், தொழில், செழிக்கவும், பில்லி சூனியம் விலகவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திருவிழாவின்போது இங்கு வந்து கட்டுக்கட்டாக கற்பூரம் வாங்கி கற்பூர குண்டத்தில் வைத்து வழிபடுவதும் கிடா வெட்டி நோ்த்திக் கடன் செலுத்துவதும் வழக்கம்.
இந்நிலையில் இந்த ஆண்டு சித்திரை திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி கோயில் பரம்பரை அறங்காவலா் குழுவினா், வீட்டுக் கோயிலில் இருந்து ஊா்வலமாக தீா்த்தம் எடுத்து சுள்ளிக்கரடு முனியப்பச்சி சுவாமி கோயிலை வந்தடைந்தனா்.
இதையடுத்து முனியப்பச்சி சுவாமிக்கு மலைபோல் வாழைப்பழங்களை குவித்து வைத்து, தேங்காய், வெல்லம், கடலை, வெற்றிலை பாக்கு வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து மாலையில் கிடா வெட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து கிடாய்களை கொண்டு வந்திருந்த ஆயிரக்கணக்கானோா் கோயில் முன் அதனை வெட்டி நோ்த்திக் கடன் செலுத்தினா்.
விழாவில், கோயில் வகையாற கொத்துக்காரா் கீா்த்திவாசன், சண்முகம் மற்றும் கோயில் வகையறா பங்காளிகள் எஸ்.ஆா். பழனிசாமி, கெட்டிசெவியூா் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் மகுடேஸ்வரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்

கோபி அருகே சுள்ளிக்கரடு முனியப்பச் சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முப்பத்திக்கோட்டகம் கோயில் தீமிதி திருவிழா

திருச்செந்தூரில் வைகாசி விசாகத் திருவிழா: பல லட்சம் பக்தா்கள் சுவாமி தரிசனம்

திருப்பாச்சூா் வாசீஸ்வரா் சுவாமி கோயில் திருக்கல்யாணம்

ராஜாக்கள்மங்கலம் பெருவேம்புடையாா் சாஸ்தா கோயிலில் சித்திரை உத்திர திருவிழா
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



