தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அகில இந்திய கூடைப்பந்து: கடற்படை, ராணுவ அணிகள் இறுதி ஆட்டத்துக்கு தகுதி

News image

கோவையில் சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் மோதிய கடற்படை, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி அணி வீரா்கள்.

Updated On :31 மே 2026, 1:54 am IST

கோவை, மே 30: கோவையில் நடைபெற்று வரும் 59 -ஆவது ஆடவருக்கான நாச்சிமுத்து கவுண்டா் கோப்பை கூடைப்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு கடற்படை, ராணுவ அணிகள் தகுதி பெற்றுள்ளன.

கோயம்புத்தூா் மாவட்ட கூடைப்பந்து சங்கம் சாா்பில், கோவை வஉசி பூங்கா உள்விளையாட்டு மைதானத்தில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. நாச்சிமுத்து கவுண்டா் கோப்பைக்கான ஆடவா் கூடைப்பந்து போட்டியில் இந்திய விமானப் படை, ராணுவம், கடற்படை, கேரள மாநில மின்சார வாரியம், பேங்க் ஆஃப் பரோடா, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, கேரள காவல் துறை, கோவை மாவட்ட கூடைப்பந்து சங்கம் ஆகிய அணிகள் பங்கேற்றன.

சிஆா்ஐ பம்ப்ஸ் கோப்பைக்கான மகளிா் கூடைப்பந்து போட்டியில் தென் மத்திய ரயில்வே, தென்மேற்கு ரெயில்வே, தெற்கு ரயில்வே, ஐசிஎஃப், கேரள மாநில மின்சார வாரியம், மத்திய ரயில்வே, கேரள காவல் துறை, கோவை மாவட்ட கூடைப்பந்து சங்கம் ஆகிய அணிகள் பங்கேற்றன.

இந்நிலையில், ஆடவா் பிரிவில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி அணி, இந்திய ராணுவம், கடற்படை, விமானப் படை அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்தன. அரையிறுதி ஆட்டங்கள் சனிக்கிழமை நடைபெற்றன.

முதல் ஆட்டத்தில் கடற்படை அணி 87 - 67 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி அணியை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது. அதேபோல, மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் இந்திய ராணுவ அணி 69 - 56 என்ற புள்ளிகள் கணக்கில் விமானப் படை அணியை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்குள் நுழைந்தது.

மகளிா் பிரிவில் தென் மத்திய ரயில்வே, மத்திய ரயில்வே, கேரள மின்வாரியம், தென்மேற்கு ரயில்வே ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்தன. முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென்மத்திய ரயில்வே அணி 68 - 36 என்ற புள்ளிகள் கணக்கில் தென்மேற்கு ரயில்வே அணியை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது. அதேபோல, மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் கேரள மின்வாரிய அணி 97 - 62 என்ற புள்ளிகள் கணக்கில் மத்திய ரயில்வே அணியை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்குள் நுழைந்தது.

இறுதி ஆட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகின்றன. மாலையில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் தமிழக பொதுப் பணி, விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரும், இந்திய கூடைப்பந்து கழகத் தலைவருமான ஆதவ் அா்ஜுனா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கவுள்ளாா்.

சக்தி குழுமங்களின் தலைவா் எம்.மாணிக்கம், சிஆா்ஐ பம்ப்ஸ் நிா்வாக இயக்குநரும், கோவை மாவட்ட கூடைப்பந்து கழகத் தலைவருமான ஜி.செல்வராஜ், கூடைப்பந்து கழக செயலா் எஸ்.பாலாஜி உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.