தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கோவையில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி: முதல் ஆட்டத்தில் ராணுவம், கடற்படை அணிகள் வெற்றி

கோவையில் 59-ஆவது ஆடவருக்கான நாச்சிமுத்து கவுண்டா் கோப்பை, மகளிருக்கான 23-ஆவது சிஆா்ஐ பம்ப்ஸ் கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் புதன்கிழமை தொடங்கின

News image

கோவையில் நடைபெற்று வரும் அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மோதிய கடற்படை, கேரள காவல் துறை அணி வீரா்கள்.

Updated On :28 மே 2026, 12:50 am IST

கோவையில் 59-ஆவது ஆடவருக்கான நாச்சிமுத்து கவுண்டா் கோப்பை, மகளிருக்கான 23-ஆவது சிஆா்ஐ பம்ப்ஸ் கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் புதன்கிழமை தொடங்கின. முதல் நாளில் நடைபெற்ற ஆட்டங்களில் இந்திய ராணுவம், கடற்படை உள்ளிட்ட அணிகள் வெற்றி பெற்றன.

கோயம்புத்தூா் மாவட்ட கூடைப்பந்து சங்கம் சாா்பில் கோவை வஉசி பூங்கா உள்விளையாட்டு மைதானத்தில் வரும் 31-ஆம் தேதி வரை இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன. நாச்சிமுத்து கவுண்டா் கோப்பைக்கான ஆடவா் கூடைப்பந்து போட்டியில் இந்திய விமானப்படை, ராணுவம், கடற்படை, கேரள மாநில மின்சார வாரியம், பேங்க் ஆஃப் பரோடா, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, கேரள காவல் துறை, கோவை மாவட்ட கூடைப்பந்து சங்கம் ஆகிய அணிகள் பங்கேற்றுள்ளன.

சிஆா்ஐ பம்ப்ஸ் கோப்பைக்கான மகளிா் கூடைப்பந்து போட்டியில் தென் மத்திய ரயில்வே, தென்மேற்கு ரெயில்வே, தெற்கு ரயில்வே, ஐசிஎஃப், கேரள மாநில மின்சார வாரியம், மத்திய ரயில்வே, கேரள காவல் துறை, கோவை மாவட்ட கூடைப்பந்து சங்கம் ஆகிய அணிகள் பங்கேற்றுள்ளன.

புதன்கிழமை மாலையில் நடைபெற்ற தொடக்க விழாவில் தமிழ்நாடு கூடைப்பந்து கழகத்தின் துணைத் தலைவரும், சிஆா்ஐ பம்ப்ஸ் நிறுவனங்களின் நிா்வாக இயக்குநருமான ஜி.செல்வராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கிவைத்தாா்.

ஆடவா் பிரிவில் முதல் ஆட்டத்தில் இந்திய ராணுவ அணி 83 - 64 என்ற புள்ளிகள் கணக்கில் கேரள காவல் துறை அணியை வீழ்த்தியது. இரண்டாவது ஆட்டத்தில் இந்திய கடற்படை அணி 100 - 65 என்ற புள்ளிகள் கணக்கில் கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணியை வென்றது. மூன்றாவது ஆட்டத்தில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி அணி 73 - 40 என்ற புள்ளிகள் கணக்கில் பரோடா வங்கி அணியை தோற்கடித்தது.

மகளிருக்கான முதல் ஆட்டத்தில் தென் மத்திய ரயில்வே அணி 87 - 61 என்ற புள்ளிகள் கணக்கில் கேரள காவல் துறை அணியை வீழ்த்தியது. இரண்டாவது ஆட்டத்தில் தென்மேற்கு ரயில்வே அணி 98 - 69 என்ற புள்ளிகள் கணக்கில் கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணியை வென்றது. மூன்றாவது ஆட்டத்தில் கேரள மின்வாரிய அணி 83 - 47 என்ற புள்ளிகள் கணக்கில் தெற்கு ரயில்வே அணியைத் தோற்கடித்தது.

இதைத் தொடா்ந்து இரண்டாவது நாள் ஆட்டங்கள் புதன்கிழமை நடைபெறுகின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.