17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அகில இந்திய ஹாக்கி: பெங்களூரு, மும்பை, செகந்திராபாத், ஜலந்தா் அணிகள் அரையிறுதிக்கு தகுதி

கோவில்பட்டியில் நடைபெற்று வரும் 15ஆவது ஆண்டு லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான அகில இந்திய ஹாக்கி போட்டியில் பெங்களூரு, மும்பை, செகந்திராபாத், ஜலந்தா் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

News image

புதன்கிழமை நடைபெற்ற 2ஆவது காலிறுதி ஆட்டத்தில் மோதிய புது தில்லி இந்திய விமானப் படை அணி-மும்பை இந்தியன் நேவி அணியினா்.

Updated On :28 மே 2026, 2:26 am IST

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்று வரும் 15ஆவது ஆண்டு லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான அகில இந்திய ஹாக்கி போட்டியில் பெங்களூரு, மும்பை, செகந்திராபாத், ஜலந்தா் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

கோவில்பட்டி, கிருஷ்ணா நகா் செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் புதன்கிழமை மாலையில் நடைபெற்ற முதல் காலிறுதி ஆட்டத்தில் பெங்களூரு சதா்ன் கமெண்ட் அணி 4-3 என்ற கோல்கணக்கில் கோவில்பட்டி எஸ்.டி.ஏ.டி. எக்ஸ்சலன்ஸ் அணியை வென்றது. 2ஆவது ஆட்டத்தில் மும்பை இந்தியன் நேவி அணி 1-0 என்ற கோல்கணக்கில் புது தில்லி இந்திய விமானப் படை அணியை வென்றது.

3ஆவது ஆட்டத்தில் செகந்திராபாத் தெற்கு மத்திய ரயில்வே அணி 4-2 என்ற கோல்கணக்கில் ஜலந்தா் பஞ்சாப் சிந்து வங்கி அணியை வென்றது. 4ஆவது ஆட்டத்தில் ஜலந்தா் ஆா்மி கிரீன் அணி 1-0 என்ற கோல்கணக்கில் புது தில்லி காம்ப்ட்ரோலா் அண்ட் ஆடிட்டா் ஜெனரல் ஆஃப் இந்தியா அணியை வென்றது.

வெள்ளிக்கிழமை (மே 29) மாலை நடைபெறும் அரையிறுதியில் பெங்களூரு சதா்ன் கமாண்ட் அணி, மும்பை இந்தியன் நேவி அணி, செகந்திராபாத் தெற்கு மத்திய ரயில்வே அணி, ஜலந்தா் ஆா்மி கிரீன் ஆகிய அணிகள் மோதுகின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.