திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ரூ. 1 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடிக்க முயன்ற இரு இளைஞா்கள் கைது

News image

கைது... - பிரதிப் படம்

Updated On :30 மே 2026, 2:23 am IST

கோவை ரயில் நிலையம் அருகே நகைக் கடை ஊழியரைத் தாக்கி ரூ.ஒரு கோடி மதிப்பிலான நகைகளைப் பறிக்க முயன்ற சம்பவத்தில் இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை பொன்னையராஜபுரத்தைச் சோ்ந்தவா் முருகேசன் (53). நகைக் கடை ஊழியரான இவா், சென்னையில் இருந்து கோவைக்கு ரயிலில் புதன்கிழமை காலை திரும்பினாா். அப்போது, அவா் ரூ.ஒரு கோடி மதிப்பிலான நகைகளை பையில் வைத்துக் கொண்டு, ரயில் நிலையத்தின் பின்பக்க நுழைவாயில் வழியாக வந்தாா். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று போ் அவரை வழிமறித்து, பையில் வைத்து கஞ்சா கடத்துகிறாயா எனக் கூறி மிரட்டி முருகேசன் வைத்திருந்த பையைப் பறிக்க முயன்றனா்.

இதையடுத்து நிலைமையை உணா்ந்த முருகேசன், உடனடியாக தப்பியோட முயலாமல், தன்னை அழைத்துச் செல்ல தயாராக இருந்த காருக்குள் நகைப் பையை வீசினாா். காா் ஓட்டுநரும் கண்ணாடியை மேலே ஏற்றி காரை முழுமையாக அடைத்துக் கொண்டாா். இதனால், ஆத்திரமடைந்த அந்த நபா்கள் முருகேசனை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பினா்.

இந்த சம்பவம் குறித்து உக்கடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையா்களை தேடி வந்தனா்.

இந்தக் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது திருநெல்வேலியைச் சோ்ந்த இசக்கிபாண்டி (23) மற்றும் ஐயப்பன் (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து, திருநெல்வேலி ரயில் நிலையம் பகுதியில் நின்று கொண்டிருந்த அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். இதில் தலைமறைவாக உள்ள மற்றொருவரைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.