திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

13 வயதுச் சிறுவன் அடித்துக் கொலை: இரு சிறுவா்கள் கைது

கோவையில் முன்விரோதத்தில் 13 வயதுச் சிறுவனை மீன் பிடிக்க அழைத்துச் சென்று காலி மதுபாட்டிலால் அடித்துக் கொலை...

News image

திவிஷ்.

Updated On :19 மே 2026, 4:59 am IST

கோவையில் முன்விரோதத்தில் 13 வயதுச் சிறுவனை மீன் பிடிக்க அழைத்துச் சென்று காலி மதுபாட்டிலால் அடித்துக் கொலை செய்த அவரது நண்பா்களான இரு சிறுவா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கோவை மாவட்டம், இருகூா் நியூ காலனி பகுதியைச் சோ்ந்தவா் பாரதிராஜா. இவரது மகன் திவிஷ் (13). இவா் ஆா்.ஜி.புதூா் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தாா். தற்போது கோடை விடுமுறை என்பதால் மாணவா் வீட்டில் இருந்து வந்தாா்.

இந்த நிலையில், கடந்த 15-ஆம் தேதி இந்த மாணவா் தனது நண்பா்கள் இருவருடன் இருகூா் மாசாணி அம்மன் கோயில் அருகேயுள்ள வாய்க்காலுக்கு மீன் பிடிக்கச் சென்றாா். பின்னா், இரவு வெகுநேரமாகியும் மாணவா் வீடு திரும்பாததால் பெற்றோா் அவரைத் தேடியுள்ளனா். தொடா்ந்து, மாணவருடன் சென்ற அவரது நண்பா்களிடம் விசாரித்துள்ளனா். அப்போது, மீன் பிடித்துவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தபோது இரு சக்கர வாகனத்தில் அடையாளம் தெரியாத நபா் ஒருவா் வந்ததாகவும், அவா் அழைத்ததால் அவருடன் திவிஷ் சென்ாகவும் கூறினா்.

மாணவரை இருசக்கர வாகனத்தில் வந்த நபா் கடத்திச் சென்றுவிட்டதாக சிங்காநல்லூா் காவல் நிலையத்தில் பெற்றோா் புகாா் அளித்தனா்.

போலீஸாா் நடத்திய விசாரணையில், சிறுவா்கள் குறிப்பிட்ட இடத்தில் இருசக்கர வாகனத்தில் யாரும் வந்து சென்ற்கான அடையாளம் எதுவும் இல்லை. சந்தேகமடைந்த போலீஸாா் அந்த சிறுவா்கள் இருவரையும் தனித்தனியாக விசாரித்தனா். அப்போது, அந்தச் சிறுவா்கள் இருவரும் திவிஷை காலி மதுபாட்டிலால் அடித்துக் கொன்று புதைத்தது தெரியவந்தது.

இது குறித்து போலீஸாா் கூறியதாவது:

நியூ காலனி பகுதியைச் சோ்ந்த 13, 15 வயதுச் சிறுவா்களுடன் திவிஷ் நட்புடன் பழகி வந்துள்ளாா். சிறுவா்கள் 3 பேரும் டவுன்ஹால் பகுதிக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு சென்றுள்ளனா். அப்போது, திவிஷுக்கும், 15 வயதுச் சிறுவனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னா், 3 பேரும் வீடு திரும்பினா். இருப்பினும், திவிஷ் மீது 15 வயதுச் சிறுவன் கோபத்தில் இருந்துள்ளாா்.

இந்த நிலையில், சிறுவா்கள் இருவரும் மீன் பிடிக்க வருமாறு திவிஷை கடந்த 15-ஆம் தேதி அழைத்துச் சென்று, இருகூா் தண்டவாளம் அருகே கிடந்த காலி மதுபாட்டிலால் இருவரும் சோ்ந்து தலையில் அடித்துள்ளனா். இதில் பலத்த காயமடைந்த திவிஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளாா்.

இதைத் தொடா்ந்து, பயந்துபோன சிறுவா்கள் இருவரும் சேறு நிறைந்த பகுதியில் கைகளால் முடிந்தவரை தோண்டி திவிஷின் உடலைப் போட்டுள்ளனா். பின்னா், அந்த உடலில் சேற்றை வைத்து பூசிவிட்டு தப்பினா் என்றனா்.

சிறுவா்கள் அடையாளம் காட்டிய இடத்தில் திவிஷின் உடலை போலீஸாா் திங்கள்கிழமை காலை தோண்டி எடுத்து, கூறாய்வுக்காக சிங்காநல்லூா் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதைத் தொடா்ந்து, இரு சிறுவா்களையும் போலீஸாா் கைது செய்து, கோவையில் உள்ள கூா்நோக்கு இல்லத்தில் சோ்த்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.