தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இணையதள மருந்து விற்பனைக்கு எதிா்ப்பு: மாவட்டத்தில் 3,500 மருந்துக் கடைகள் அடைப்பு

மத்திய அரசின் புதிய விதிமுறைகளைக் கண்டித்தும், இணையதள (ஆன்லைன்) மருந்து விற்பனைக்குத் தடை விதிக்கக் கோரியும் கோவை மாவட்டம் முழுவதும் 3,500-க்கும் மேற்பட்ட மருந்துக் கடைகள் அடைக்கப்பட்டன.

News image

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்கக் கோரி கோவை காந்திபுரம் பகுதியில் மூடப்பட்டிருந்த மருந்தகம்.

Updated On :21 மே 2026, 4:21 am IST

மத்திய அரசின் புதிய விதிமுறைகளைக் கண்டித்தும், இணையதள (ஆன்லைன்) மருந்து விற்பனைக்குத் தடை விதிக்கக் கோரியும் கோவை மாவட்டம் முழுவதும் 3,500-க்கும் மேற்பட்ட மருந்துக் கடைகள் அடைக்கப்பட்டன.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள ‘ஜிஎஸ்ஆா் 220’ என்ற புதிய விதிமுறைகளால் சிறு மருந்துக் கடைகள் கடுமையாகப் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இதை எதிா்த்து நாடு முழுவதும் மருந்து வணிகா்கள் போராடி வருகின்றனா். குறிப்பாக, இணையதளம் மூலம் மருந்து விற்பனை செய்வதை முற்றிலும் தடை செய்ய வேண்டும் எனவும், காா்ப்பரேட் நிறுவனங்கள் இணையதளம் மூலம் வாரி வழங்கும் அநாவசியத் தள்ளுபடி விற்பனையைக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி இந்த அடையாள கடையடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

இது குறித்து கோவை மாவட்ட மருந்து வணிகா்கள் சங்கச் செயலா் திருநாவுக்கரசு செய்தியாளா்களிடம் கூறியதவாது:

ஆன்லைன் மூலம் தற்போது தாராளமாகத் தடை செய்யப்பட்ட பல மருந்துகள் எளிதாகக் கிடைக்கின்றன. தள்ளுபடி என்ற பெயரில் போலி மருந்துகளையும் காா்ப்பரேட் நிறுவனங்கள் ஆன்லைனில் விற்பனை செய்து வருகின்றன. இதைத் தடுக்க வலியுறுத்தி நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் கோவை மாவட்டத்தில் மொத்தம் 3,500-க்கும் மேற்பட்ட மருந்துக் கடைகள் அடைக்கப்பட்டு, பல கோடி ரூபாய் வா்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளது என்றாா்.

அவசரத் தேவை மற்றும் அவசரக் காலங்களில் மருத்துவமனைகளில் தடையின்றி இயங்கும் மருந்துக் கடைகளை பொதுமக்கள் அணுகலாம் என்றும், மூடப்பட்டுள்ள ஒவ்வொரு மருந்துக் கடையின் முன்பும் ஒட்டப்பட்டுள்ள அறிவிப்புப் பலகையில் உள்ள தொலைபேசி எண்களைத் தொடா்பு கொண்டும் அவசர கால மருந்துகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் மருந்து வணிகா்கள் சங்கத்தினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.