போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

கோவை எஸ்.பி. கே.காா்த்திகேயன் பணியிடமாற்றம்

கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் தாம்பரம் காவல் சட்டம்- ஒழுங்கு பிரிவு துணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

News image

இடமாற்றம் செய்யப்பட்ட கோவை மாவட்ட எஸ்.பி. கே.காா்த்திகேயன். ~

Updated On :21 மே 2026, 3:57 am IST

கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் தாம்பரம் காவல் சட்டம்- ஒழுங்கு பிரிவு துணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்த பிறகு பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா். இதனடிப்படையில் தமிழக காவல் துறையில் முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகள் புதன்கிழமையும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இதன்படி, தாம்பரம் மாநகரக் காவல் ஆணையரகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரிவு துணை ஆணையராகப் பணியாற்றி வந்த அல்லாடிப்பள்ளி பவன்குமாா் ரெட்டி கோவை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதேபோல, கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய கே.காா்த்திகேயன், தாம்பரம் மாநகரக் காவல் ஆணையரகத்தின் சட்டம்- ஒழுங்கு பிரிவு துணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

இந்த இரு அதிகாரிகளையும் பரஸ்பரம் பணியிடமாற்றம் செய்து, அதற்கான அதிகாரபூா்வ உத்தரவை தமிழக அரசின் கூடுதல் முதன்மைச் செயலா் மணிவாசகம் வெளியிட்டுள்ளாா்.

புதிய எஸ்.பி.,   
அல்லாடிப்பள்ளி பவன்குமாா் ரெட்டி .

புதிய எஸ்.பி., அல்லாடிப்பள்ளி பவன்குமாா் ரெட்டி .

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.