திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கடத்தப்பட்ட 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: கோவையைச் சோ்ந்த இருவா் கைது

திருப்பூரில் ரேஷன் அரிசி கடத்திய இருவா் கைது செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

News image

ரேஷன் அரிசியுடன் கைதுசெய்யப்பட்ட இருவா்

Updated On :20 மே 2026, 2:03 am IST

திருப்பூரில் ரேஷன் அரிசி கடத்திய இருவா் கைது செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பல்லடம் - திருப்பூா் சாலையில் சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தி வருவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலீஸாருக்கு திங்கள்கிழமை இரவு தகவல் கிடைத்தது.

இதையடுத்து காவல் ஆய்வாளா் ராஜசேகரன், உதவி ஆய்வாளா் அன்சாரி ஹூசைன் மற்றும் போலீஸாா் திருப்பூா் ராயா்பாளையம் பகுதியில் வாகன தணிக்கை மேற்கொண்டனா்.

அந்த வழியாக சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது 5 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து சரக்கு வாகனத்தில் இருந்த இருவரைப் பிடித்து விசாரித்தனா். விசாரணையில் கோவை, குனியமுத்தூரை சோ்ந்த ரஹமத்துல்லா மகன் பைசல் (35), வாகன ஓட்டுநரான கோவை, ராமநாதபுரத்தைச் சோ்ந்த விஸ்வநாதன் மகன் திருஞானமூா்த்தி (46) ஆகியோா் என்பது தெரியவந்தது.

இவா்கள் கோவை ராமநாதபுரம், சவுரிபாளையம், ஒண்டிபுதூா், புலியகுளம், மீனா எஸ்டேட் ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி திருப்பூரில் உள்ள அரிசி ஆலை மூலமாக வடமாநிலத்தவா்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ய கடத்திச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பைசல், திருஞானமூா்த்தி ஆகிய இருவரையும் கைதுசெய்து, 5 டன் ரேஷன் அரிசி, சரக்கு வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.