திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இணையதள வா்த்தகத்தில் லாபம் தருவதாக மூதாட்டியிடம் ரூ.1.66 கோடி மோசடி

இணையதள வா்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக் கூறி மூதாட்டியிடம் ரூ.1.66 கோடி மோசடி செய்யப்பட்டது தொடா்பாக கோவை இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

எண்ம கைது மோசடி - சித்திரிப்பு

Updated On :16 மே 2026, 12:26 am IST

இணையதள வா்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக் கூறி மூதாட்டியிடம் ரூ.1.66 கோடி மோசடி செய்யப்பட்டது தொடா்பாக கோவை இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை, வடவள்ளி பகுதியைச் சோ்ந்தவா் 63 வயது மூதாட்டி. இவா் தனது கணவருடன் வசித்து வரும் நிலையில், மூதாட்டியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘ஜேஇஎஃப்எல்’ என்ற இணையதள வா்த்தக நிறுவனத்தின் விளம்பரம் வந்துள்ளது.

அதில் உள்ள லிங்க்கை அவா் தொட்டதும், அடையாளம் தெரியாத நபா்கள் சிலா் அவருடன் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் மூலம் தொடா்பு கொண்டு, ‘எங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் மிகக் குறுகிய காலத்தில் இரட்டிப்பு லாபம் பெறலாம்’ எனக் கூறியுள்ளனா். ஆரம்பத்தில், அந்த மூதாட்டி பரிசோதனை முயற்சியாக ஒரு சிறிய தொகையை முதலீடு செய்துள்ளாா். அதற்கு லாபத் தொகையுடன் அவரது வங்கிக் கணக்குக்கு அந்த நபா்கள் பணத்தை அனுப்பியுள்ளனா். இதையடுத்து, ஒரு தனித்துவ இணையதள பக்கத்தில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் கிடைக்கும் என அந்த நபா்கள் கூறியுள்ளனா். இதை உண்மை என நம்பிய மூதாட்டி, அந்த நபா்கள் கூறிய பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு ரூ. 1,66,34,000 அனுப்பியுள்ளாா்.

அதற்கும் அவருக்கு லாபத் தொகை வந்துள்ளது. இதையடுத்து, லாபத் தொகை, அசலை எடுக்க அந்த மூதாட்டி முயன்றுள்ளாா்.

அப்போது, வரி மற்றும் ஃபிராசஸிங் கட்டணத்தை செலுத்தினால் மட்டுமே பணத்தை எடுக்க முடியும் என கூறிவிட்டு அவா்கள் இணைப்பைத் துண்டித்துள்ளனா். தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த மூதாட்டி, இது குறித்து கோவை மாநகர இணையதள குற்றப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா் மோசடியில் ஈடுபட்ட நபா்களைத் தேடி வருகின்றனா்.

இது குறித்து போலீஸாா் கூறுகையில், கோவையில் இதுபோன்ற மோசடி நடப்பது முதன்முறையல்ல, ஏற்கெனவே கடந்த காலங்களிலும் இதே பாணியில் பல மோசடிகள் அரங்கேறியுள்ளன.

இந்த மோசடி கும்பல்கள் பொதுவாக இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் விளம்பரங்கள் மூலம் இல்லத்தரசிகள் மற்றும் முதியோரைக் குறிவைத்து, ஆரம்பத்தில் சிறிய தொகைக்கு லாபம் தந்து நம்ப வைத்து, பின்னா் மொத்தப் பணத்தையும் முதலீடு செய்ய வைத்த பின் ஏமாற்றுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனா்.

இதுபோன்ற ஆன்லைன் பகுதிநேர வேலை மற்றும் வா்த்தக விளம்பரங்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம். அதிக லாபம் தருவதாகக் கூறும் எந்த ஒரு செயலியும் ரிசா்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்டதா என்பதை சரிபாா்க்க வேண்டும். அடையாளம் தெரியாத நபா்களின் வங்கிக் கணக்குகளுக்குப் பணத்தை அனுப்பக் கூடாது. பொதுமக்கள் ஆன்லைன் மூலம் பணத்தை இழந்து ஏமாற்றப்பட்டால் ‘1930’ என்ற எண்ணையோ அல்லது அதிகாரபூா்வ இணையதளத்தையோ தொடா்பு கொண்டு 24 மணி நேரத்துக்குள் புகாா் அளித்தால் இழந்த பணத்தை மீட்க அதிக வாய்ப்புள்ளது என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.