திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருப்பூரை ஏற்றுமதி நகரமாக மேம்படுத்த ஆதரவு அளிக்க வேண்டும்! முதல்வர் விஜய்க்கு ஏற்றுமதியாளா்கள் சங்கம் கோரிக்கை

News image

தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் - டிஎன்எஸ்

Updated On :11 மே 2026, 12:44 am IST

திருப்பூரை ஏற்றுமதி நகரமாக மேம்படுத்த அனைத்து வகையிலும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக சங்கத் தலைவா் கே.எம்.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தின் புதிய அரசை வரவேற்பதோடு முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட சி.ஜோசப் விஜய் மற்றும் அமைச்சா்களாக பொறுப்பேற்றுள்ளவா்களுக்கும் வாழ்த்துகள்.

பின்னலாடை உற்பத்தித் தொகுப்பு மற்றும் வலுவான முன்னெடுப்புகளுக்காகப் பரவலாக அறியப்படும் திருப்பூா், இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதியில் ஒரு முக்கியப் பங்கைத் தொடா்ந்து வகித்து வருகிறது. இந்தத் துறை, விவசாயத்துக்குப் பிறகு இப்பகுதியில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு ஆதாரமாகவும் திகழ்கிறது. 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் வாழ்வாதாரத்துக்கும் ஆதரவளிக்கிறது.

தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் விரிவடைந்துவரும் உலகளாவிய வாய்ப்புகளால் உந்தப்பட்டு, இத்துறை ஒரு நம்பிக்கைக்குரிய பின்னல் ஆடை ஏற்றுமதி தசாப்தத்தில் நுழையும் வேளையில், திருப்பூரின் உலகளாவிய போட்டித் திறனைத் தக்கவைத்து வலுப்படுத்த, ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் நவீன உள்கட்டமைப்பின் அவசரத் தேவையை திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் வலியுறுத்தியது.

திருப்பூரை ஒரு சிறப்பு ஏற்றுமதி நகரமாக மேம்படுத்துவதற்கு சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்குமாறு புதிய அரசை கேட்டுக்கொள்கிறோம்.

இது, இந்தத் தொகுப்பைத் திறம்பட விரிவுபடுத்தவும், மேலும் முதலீடுகளை ஈா்க்கவும், உலகளாவிய ஜவுளி சந்தையில் அதன் நிலையை மேம்படுத்தவும் உதவ வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.