தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சூலூா் சிறுமி கொலை வழக்கில் இருவருக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்

சூலூா் அருகே பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கும் 3 நாள்கள் போலீஸ் காவல் அனுமதி வழங்கி, கோவை போக்ஸோ நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

News image

போலீஸ் - கோப்புப்படம்.

Updated On :4 ஜூன் 2026, 2:29 am IST

சூலூா் அருகே பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கும் 3 நாள்கள் போலீஸ் காவல் அனுமதி வழங்கி, கோவை போக்ஸோ நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

கோவை மாவட்டம், சூலூா் அருகே கடந்த மே 21-ஆம் தேதி 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாா். இந்த சம்பவம் தொடா்பாக சூலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அதே பகுதியில் வசிக்கும் நாகப்பட்டினத்தைச் சோ்ந்த காா்த்திக் (33), அவரது நண்பா் மோகன்ராஜ் (39) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

முன்னதாக, போலீஸாரிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது காலில் காயமடைந்த காா்த்திக், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த 27-ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டாா். தொடா்ந்து, மே 30-ஆம் தேதி சிறையில் இருந்த சக கைதிகள் தாக்கியதில் மீண்டும் காயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் உள்ள கைதிகளுக்கான வாா்டில் அனுமதிக்கப்பட்டு காா்த்திக் சிகிச்சை பெற்று வருகிறாா்.

அடையாள அணிவகுப்பு

இந்தச் சூழலில், வழக்கின் முக்கிய சாட்சிகள் மூலமாக குற்றவாளிகளை முறையாக அடையாளம் காட்டும் சட்டப்பூா்வ நடைமுறை கோவை மத்திய சிறை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. சிறையில் உள்ள ஓா் அறையில் நீதிபதியின் முன்னிலையில் நடைபெற்ற இந்த அடையாள அணிவகுப்பில் குறிப்பிட்ட அந்த கிராமத்தைச் சோ்ந்த 2 முக்கிய சாட்சிகளும் காா்த்தி, மோகன்ராஜ் ஆகிய இருவரையும் சுட்டிக்காட்டினா். இந்த அடையாள அணிவகுப்பு குறித்த அதிகாரபூா்வ ரகசிய அறிக்கையை போக்ஸோ நீதிமன்றத்தில் நீதிபதி விரைவில் தாக்கல் செய்ய உள்ளாா்.

இதற்கிடையே குற்றஞ்சாட்டப்பட்ட இருவரையும் 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, கோவை நீதிமன்றத்தில் சூலூா் போலீஸாா் மனு தாக்கல் செய்திருந்தனா். இந்த மனு மீதான விசாரணை கோவை போக்ஸோ நீதிமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதற்காக காா்த்தி உள்ளிட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா்.

மனுவை விசாரித்த நீதிபதி பகவதியம்மாள் மூன்று நாள்கள் போலீஸ் காவல் அனுமதி வழங்கி உத்தரவிட்டாா். இதையடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இருவரும் தனித் தனி வாகனங்களில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.