கோவை நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
கோவை நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக..


கோவை நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த மின்னஞ்சலை தொடர்ந்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை ரேஸ்கோர்சில் வழக்குரைஞர்கள் பயிற்சி மைய அலுவலகம் உள்ளது. இங்கு இன்று காலை வழக்கம்போல் மின்னஞ்சல் தகவல்களை ஊழியர்கள் பார்த்துக் கொண்டு இருந்தனர். அப்போது மின்னஞ்சலில் கோவை நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது, அது வெடித்து சிதற உள்ளது என கூறப்பட்டு இருந்தது. உடனே இதுகுறித்து ஊழியர்கள் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.
போலீஸார் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவிகளுடன் கோவை நீதிமன்ற வளாகத்திற்குச் சென்றனர். அங்கு அனைத்து இடங்களிலும் போலீஸார் தீவிர சோதனை செய்தனர். நீண்ட நேரம் சோதனைக்குப் பிறகு வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. எனவே, இந்த மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து ஊழியர்கள் நிம்மதி அடைந்தனர்.
இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பாஸ்போர்ட் அலுவலகம், விமான நிலையம் மற்றும் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் அனுப்பிய அதே இளைஞர்தான் கோவை நீதிமன்றத்துக்கும் மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்து இருக்கலாம் என கூறப்படுகிறது. போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...