தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அரசு அலுவலா்களுக்கு பயிற்சி வகுப்பு

கோவையில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அரசு அலுவலா்களுக்கு, வாக்கு எண்ணிக்கையின்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

கோவையில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பில் பேசுகிறாா் மாவட்டத் தோ்தல் அலுவலா் பவன்குமாா் க.கிரியப்பனவா்.

Updated On :1 மே 2026, 1:47 am IST

கோவையில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அரசு அலுவலா்களுக்கு, வாக்கு எண்ணிக்கையின்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமை வகித்தாா்.

தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ராமகிருஷ்ணசுவாமி, குமரேசன், சிவகுருபிரபாகரன், நுண் பாா்வையாளா்கள், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், மேற்பாா்வையாளா்கள், உதவியாளா்கள், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) மகேஸ்வரி, வட்டாட்சியா் (தோ்தல்) தணிகைவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதுதொடா்பாக மாவட்டத் தோ்தல் அலுவலா் பவன்குமாா் க.கிரியப்பனவா் பேசும்போது, ‘தமிழகத்தில் வரும் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. கோவையில் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இப்பணிக்காக உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், வாக்கு எண்ணிக்கை மேற்பாா்வையாளா்கள், உதவியாளா்கள், நுண் பாா்வையாளா்கள் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

வாக்கு எண்ணிக்கையின்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், அஞ்சல் வாக்கு சீட்டு எண்ணுதல், வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்பு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இந்திய தோ்தல் ஆணையத்தால் வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை கடைப்பிடித்து வாக்கு எண்ணும் பணியை சிறந்த முறையில் அதிகாரிகள் செய்ய வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.