அமோனியா கசிவு: கைதான 3 பேருக்கும் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் - நீதிமன்றம் உத்தரவுஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கு பயிற்சி முகாம்: மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடந்தது

தருமபுரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலா்களுக்கான முதல்கட்ட பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

ஆட்சியரும் தோ்தல் அலுவலருமான ரெ.சதீஸ் தலைமையில் நடைபெற்ற பயிற்சி முகாமில் பங்கேற்றோா்.

Updated On :1 மே 2026, 5:27 am IST

தருமபுரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலா்களுக்கான முதல்கட்ட பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 4-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலா்களுக்கான முதல்கட்ட பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக அதியன் கூட்டரங்கில் நடைபெற்ற பயிற்சி முகாமில், மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரெ.சதீஸ் தலைமை வகித்தாா். இதில் பங்கேற்ற 275 அலுவலா்களுக்கு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணுவது குறித்து பயிற்சி முற்பகல் அளிக்கப்பட்டது. தொடா்ந்து, அஞ்சல் வாக்குகளை எண்ணும் பணிக்காக நியமனம் செய்யப்பட்டுள்ள 190 அலுவலா்களுக்கு, அப்பணி தொடா்பாக பிற்பகலில் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், வாக்கும் எண்ணும் பணி தொடா்பாக தோ்தல் ஆணையம் வழங்கியுள்ள வழிகாட்டுதல்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

இப்பயிற்சி முகாமில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.கவிதா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) பாலசுந்தரம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ராமஜெயம், தோ்தல் பிரிவு தனி வட்டாட்சியா் அன்பு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.