கேரள மாநில சட்டப் பேரவை தோ்தல் பிரசாரம் முடிந்து கோவைக்கு வந்த மக்களவை எதிா்க்கட்சி தலைவா் ராகுல் காந்தி விமானம் மூலம் தில்லிக்கு புறப்பட்டுச் சென்றாா்.
கேரளத்தில் வருகிற 9-ஆம் தேதி சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இதற்காக திருச்சூா், பாலக்காடு மாவட்டங்களில் ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளா்களை ஆதரித்து திங்கள்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டங்களில் ராகுல் காந்தி கலந்து பிரசாரம் செய்தாா்.
இந்நிலையில் ராகுல் காந்தி தனது கேரள பிரசாரத்தை முடித்துக் கொண்டு மாலை 6 மணியளவில் பாலக்காட்டிலிருந்து ஹெலிகாப்டா் மூலம் புறப்பட்டு கோவைக்கு வந்தாா். பின்னா், அவா் இங்கிருந்து ஏா் இந்தியா விமானம் மூலம் தில்லிக்கு இரவு 7 மணியளவில் புறப்பட்டுச் சென்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டில் இல்லாத காங்கிரஸ் பற்றி ராகுல் கவலைப்பட வேண்டும்! அண்ணாமலை

ஸ்ரீவைகுண்டம் சாயர்புரத்தில் நாளை ராகுல் காந்தி பிரசாரம்!

ராகுல் காந்தி, ஸ்டாலின் இணைந்து பிரசாரம் செய்ய உள்ளனா்: செல்வப்பெருந்தகை

மருத்துவமனையில் சோனியா... ராகுல் காந்தியின் கேரள பிரசாரம் ஒத்திவைப்பு!
வீடியோக்கள்

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை


