காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், கேரளத்தில் ராகுல் காந்தி மேற்கொளவிருந்த பிரசாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவரும் ராகுல் காந்தியின் தாயாருமான சோனியா காந்தி உடல்நலக் குறைவால் தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை மாலை அனுமதிக்கப்பட்டார்.
பருவநிலை மாற்றம் காரணமாக சோனியாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவும் எனினும் அவர் கவலைக்கிடமான நிலையில் இல்லை எனவும் அவரின் உடல்நிலையை மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனிடையே, கேரள மாநிலத்தில் நடைபெறவுள்ள பேரவைத் தேர்தல் பிரசாரத்துக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி இன்று(மார்ச் 25) செல்லவிருந்தார்.
கோழிக்கோடு, வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யவிருந்த நிலையில் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், கோழிக்கோடு பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றவிருந்த நிலையில், அவருக்குப் பதிலாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கேரளம் செல்லவுள்ளதாகக் கூறப்படுகிறது.
Summary
Rahul Gandhi's Kerala campaign has been postponed as senior Congress leader Sonia Gandhi has been admitted to the hospital.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தமிழகம் வரும் ராகுல்! 3 மாவட்டங்களில் இன்று பிரசாரம்!

ராகுல் காந்தியின் தமிழகம் வருகை எப்போது?

கேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி
கேரள செவிலியர்களே என் தாயைக் கவனித்துக் கொள்கின்றனர்: பிரசாரத்தில் ராகுல் பாராட்டு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


