கேரள செவிலியர்களே என் தாயைக் கவனித்துக்கொள்கின்றனர் என்று தேர்தல் பிரசாரத்தில் உணர்ச்சிப்பூர்வமாக ராகுல் காந்தி பேசினார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும் ராகுல் காந்தியின் தாயாருமான சோனியா காந்தி உடல்நலக் குறைவால் தில்லியிலுள்ளதொரு மருத்துவமனையில் அனிமதிக்கப்பட்டிருக்கிறார். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சோனியா காந்தி விரைவில் வீட்டுக்குத் திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கேரள செவிலியர்களே தன் அம்மாவைக் கவனித்துக் கொள்கின்றனர் என்று பிரசாரத்தில் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசி ராகுல் காந்தி பெண் வாக்காளர்களின் ஆதரவை ஈர்த்தார்.
கேரள தேர்தல் களத்தில் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிரம்புழை பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி பேசியதாவது, “நான் இங்கு இருக்கும்போது சௌகரியமாக உணருகிறேன். அதற்கன காரணம், அங்கு (தில்லியில்) எனது அம்மாவை கேரள செவிலியர்கள் நன்றாக கவனித்துக்கொள்கின்றனர்.
அவர்கள், அன்புடனும் பரிவுடனும் மரியாதையாகவும் நடந்துகொள்கின்றனர். அதனால்தான், என்னால் இங்கு சௌகரியமாக இருக்கவும் உணரவும் முடிகிறது. இல்லையென்றால், என் அம்மா நலமாக இருக்கிறாரா? என்ற யோசனை மனதில் நிறைந்திருக்கும்.
என்னை இப்படி உணரச்செய்பவர்கள் யார்? கேரள பெண்களே. அவர்கள் நான் பேசும்போதெல்லாம் என் பேச்சைக் கவனிக்கிறார்கள்.
என்னால் கேரள பென்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாதா? உலகளவில் கேரள செவிலியர்களுக்கு அங்கீகாரம் உள்ளது. அதற்கு காரணம், அவர்களது பரிவு மற்றும் நன்னடத்தை ஆகியவையாகும்.
கேரள மக்களின் மாயாஜாலத்தை நீங்கள் மேற்காசிய பகுதிகளுக்குச் சென்றால் பார்க்கலாம். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், துபையைச் செதுக்கியவர்கள் துபை மக்கள் அல்ல; கேரள மக்களே துபையைக் கட்டமைத்தவர்களாவர்.
தங்களின் குணம், சிந்தனைகள் மற்றும் பிற மக்களை நடத்தும் முறை ஆகியவற்றால் அவர்கள் துபையைக் கட்டமைத்திருக்கிறார்கள் எனலாம். ஐந்தாண்டுகளாக வயநாடு எம்.பி.யாக நான் இருந்திருக்கிறேன். மேற்கண்ட குணாதிசயங்களை நான் கேரளத்திலிருந்து கற்றுக்கொண்டேன்” என்றார்.
Summary
Kerala nurses - Congress leader Rahul Gandhi on Monday expressed appreciation for nurses and Kerala expats in the Gulf region.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி
முதல்வர் மட்டுமே ஆட்சி செய்ய அவர் என்ன கடவுளா? - கேரளத்தில் ராகுல் இறுதிகட்ட பிரசாரம்

சோனியா காந்தியை பார்த்துக் கொண்ட கேரள செவிலியர்: ராகுல் நெகிழ்ச்சி

மருத்துவமனையில் சோனியா... ராகுல் காந்தியின் கேரள பிரசாரம் ஒத்திவைப்பு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

