அதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?
/

தமிழ்நாட்டில் இல்லாத காங்கிரஸ் பற்றி ராகுல் கவலைப்பட வேண்டும்! அண்ணாமலை

ராகுல் காந்தியின் தமிழகப் பிரசாரம் பற்றி அண்ணாமலை கருத்து...

News image

தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை - X

Updated On :20 ஏப்ரல் 2026, 11:24 am

பிற கட்சிகளைக் குறை கூறுவதற்கு முன்னதாக, தமிழ்நாட்டில் இல்லாத காங்கிரஸ் பற்றி ராகுல் கவலைப்பட வேண்டும் என்று பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், இரண்டாம் நாளாக மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று பிரசாரம் செய்தார்.

இந்த நிலையில், ராகுல் காந்தி பிரசாரம் குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் கேள்விக்கு பதிலளித்து அண்ணாமலை பேசியதாவது:

”பிற கட்சிகளைக் குறை கூறுவதற்கு முன்னதாக, தமிழ்நாட்டில் காங்கிரஸ் இல்லாததைப் பற்றிதான் ராகுல் காந்தி கவலைப்பட வேண்டும் என்று நான் கருதுகிறேன். அவரது கட்சியின் நிலைமை பூஜ்ஜியம் என்ற அளவிலேயே இருக்கிறது.

அவரும் மு.க. ஸ்டாலினும் இணைந்து பிரசாரம் செய்ய விரும்பவில்லை. இருவரும் தனித்தனியாகவே பிரசாரம் செய்கிறார்கள்.

தமிழ்நாட்டில் ராகுல் காந்தி பேசியது, 'ஈயத்தைப் பார்த்து பல் இளித்ததாம் பித்தளை' என்ற பழமொழிக்கு மிகச்சிறந்த உதாரணமாக இருந்தது.

ராகுல் காந்தியின் தமிழக வருகை பெரியளவிலான உற்சாகத்தை தாரவில்லை. மொத்தமே அரை நாள்தான் செலவழித்தார். ஆனால், பிரதமர் மோடி கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஐந்து முறை தமிழ்நாட்டுக்கு வருகை தந்துள்ளார்.

ராகுல் காந்தியின் பேச்சுகளை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஏனெனில், திமுக என்பது மூழ்கிக் கொண்டிருக்கும் ஒரு கப்பல் என்பதை நாங்கள் அனைவரும் நன்கு அறிவோம்.” என்றார்.

தேர்தல் அறிவிக்கப்பட்டதற்கு பின்னர், இருமுறை மட்டுமே தமிழ்நாட்டுக்கு வந்துள்ள ராகுல் காந்தி, கூட்டணியின் தலைவரான முதல்வர் மு.க. ஸ்டாலினை இதுவரை நேரில்கூட சந்திக்காதது குறிப்பிடத்தக்கது.

Summary

Rahul should be concerned about the Congress party, which is non-existent in Tamil Nadu! — Annamalai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.