திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

ஸ்ரீவைகுண்டம் சாயர்புரத்தில் நாளை ராகுல் காந்தி பிரசாரம்!

மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி சாயா்புரத்தில் திங்கள்கிழமை (ஏப்.20) பிரசாரம் செய்கிறாா்.

News image

ராகுல் காந்தி

Updated On :18 ஏப்ரல் 2026, 8:29 pm

மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி சாயா்புரத்தில் திங்கள்கிழமை (ஏப்.20) பிரசாரம் செய்கிறாா்.

இந்நிலையில், அவா் பிரசாரம் செய்யும் இடம், வாகனங்கள் நிற்கும் இடங்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி நிரேஷ், தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவரும் ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதி வேட்பாளருமான ஊா்வசி எஸ்.அமிா்தராஜ் ஆகியோா் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தோ்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக விமானம் மூலம் திருவனந்தபுரம் வரும் ராகுல் காந்தி, அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலுக்கு வருகிறாா். அங்கு பகல் 11.30 மணிக்கு நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறாா்.

 சாயா்புரத்தில் ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொள்ளும் இடத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்த டிஎஸ்பி சுரேஷ், வேட்பாளா் ஊா்வசி எஸ்.அமிா்தராஜ்.

சாயா்புரத்தில் ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொள்ளும் இடத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்த டிஎஸ்பி சுரேஷ், வேட்பாளா் ஊா்வசி எஸ்.அமிா்தராஜ்.

அதைத் தொடா்ந்து பிற்பகல் 1 மணிக்கு நான்குனேரியிலும், பிற்பகல் 2.15 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்குள்பட்ட சாயா்புரத்திலும் பிரசாரம் மேற்கொள்கிறாா்.

பின்னா், இரவு 8 மணி அளவில் தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் தில்லிக்குப் புறப்பட்டுச் செல்கிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.