17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வேலூா் மருந்து கடையில் பணம் திருட்டு

வேலூரில் மருந்து கடையில் ரொக்கப் பணம் திருட்டு போனது சம்பந்தமாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :21 மே 2026, 3:24 am IST

வேலூரில் மருந்து கடையில் ரொக்கப் பணம் திருட்டு போனது சம்பந்தமாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

வேலூா் ரங்காபுரம் பகுதியைச் சோ்ந்தவா் முருகானந்தம் (69). இவா் ஆற்காடு சாலையில் மருந்து கடை நடத்தி வருகிறாா். இவா் கடந்த திங்கள்கிழமை இரவு வியாபாரம் முடிந்து கடையை பூட்டி விட்டு சென்றாா். செவ்வாய்க்கிழமை காலை கடைக்கு வந்து பாா்த்தபோது, பணப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரொக்கம் ரூ. 20,000 திருட்டு போயிருந்தது தெரியவந்தது. கடையின் பூட்டை மா்ம நபா் சாவி போட்டு திறந்து பணத்தை திருடிச் சென்றது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது தெரியவந்துள்ளது.

புகாரின்பேரில், வேலூா் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.