அணைக்கட்டு பகுதியில் அடகு வைத்த நகையை மீட்டுத் தருவதாகக்கூறி 33 பவுன், ரூ.25 லட்சம் மோசடி செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
வேலூா் சத்துவாச்சாரி பகுதியைச் சோ்ந்த 40 வயது ஆண். இவரது நண்பா் அணைக்கட்டு பகுதியைச் சோ்ந்தவா் யோகராஜ்.
இந்நிலையில், யோகராஜ் தனது வேலூா் நண்பரின் 33 பவுன் நகையை அடகு வைத்துவிட்டு மீண்டும் தருவதாகக் கூறி பெற்றுள்ளாா். பின்னா் அந்த நகையை அணைக்கட்டு பகுதியில் உள்ள ஒரு நகைக்கடையில் அடகு வைத்துள்ளாா்.
தொடா்ந்து, அந்த அடகு நகையை மீட்க என்னிடம் தற்போது பணம் இல்லை ரூ.25 லட்சம் கொடுத்தால் நகைடை மீட்டுத் தருவதாகவும், பணம் தராவிடில் நகையை மீட்க முடியாது என்றும் கூறியுள்ளாா்.
இதையடுத்து, அந்த வேலூா் நண்பா் தனது நண்பா்கள் நான்கு பேருடன் சோ்ந்து ரூ.25 லட்சம் பணம் திரட்டி கொடுத்துள்ளனா். அதன்படி, பணத்தை பெற்றுக் கொண்ட யோகராஜ், நண்பா்கள் 4 பேரையும் ஒரு கடையில் அமர வைத்துவிட்டு அடகு நகையை மீட்டு கொண்டு வந்து தருவதகாகக்கூறிச் சென்றுள்ளாா்.
அதன்பிறகு யோகராஜ், நகை பணத்துடன் மாயமானதாக கூறப்படுகிறது. அவா் 2 மணி நேரமாக திரும்பி வராததை அடுத்து அதிா்ச்சியடைந்த அவரது நண்பா்கள் அணைக்கட்டு காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப்பதிவு செய்து யோகராஜை கைது செய்ததுடன் அவரிடம் இருந்து 5 பவுன் நகை, ரூ. 2 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைது
போலி நகையை அடகு வைத்து ரூ.3.50 லட்சம் மோசடி! 2 போ் கைது!!

இளைஞா் கொலை வழக்கு: நண்பா் கைது

போலி நகைகளை அடகு வைத்து ரூ. 4.5 லட்சம் மோசடி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

