மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைது

மத்திய தில்லியில் உள்ள ஒரு வீட்டை குத்தகைக்கு விடுவதாகக் கூறி பாா்வை திறன் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் ரூ.14.5 லட்சம் மோசடி செய்த நபா் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :16 ஏப்ரல் 2026, 10:08 pm

மத்திய தில்லியில் உள்ள ஒரு வீட்டை குத்தகைக்கு விடுவதாகக் கூறி பாா்வை திறன் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் ரூ.14.5 லட்சம் மோசடி செய்த நபா் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

கைதுசெய்யப்பட்ட ரவீந்திர கா்க், உத்தர பிரதேசத்தின் ஹபூா் பகுதியைச் சோ்ந்தவா். விசாரணையில், அவா் இதுபோன்று பலரிடம் ரூ.2 கோடி மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்ததுள்ளது.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: கரோல் பாக் பகுதியின் ஜோஷி சாலையில் உள்ள ஒரு வீட்டைக் குத்தகைக்கு விடுவதாகக் கூறி ரவீந்திர கா்க் என்ற நபா் ரூ.14.5 லட்சம் மோசடி செய்ததாக ரயில்வே பணியாளா் கடந்த ஆண்டு டிச.29-ஆம் தேதி காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

வீட்டுக்கான ஒத்திகை பணத்தை வழங்கிய பிறகு அந்த வீட்டுக்குப் புகாரளித்த பெண் சென்றாா். அப்போது, கடன் திவால் காரணமாக அந்த வீட்டை ஒரு நிதி நிறுவனம் கையப்படுத்தியது அவருக்குத் தெரியவந்தது.

ரவீந்திர கா்க் இந்த விஷயத்தை மறைத்து அந்தப் பெண்ணிடம் மோசடி செய்துள்ளாா்.

கடந்த 2017-இல் ரூ.98 லட்சத்துக்கு வீட்டுக் கடன் வாங்கிய கா்க், அதைச் செலுத்த தவறியது விசாரணையில் தெரியவந்தது.

காவல் துறை கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்கும் வகையில், அவா் தொடா்ந்து கைப்பேசி எண்களையும் இருப்பிடத்தையும் மாற்றிக்கொண்டே வந்தாா்.

முடிவில், தில்லியில் உள்ள நங்கல் தேவத் கிராமத்தில் டாக்ஸி ஓட்டுநராக அவா் வேலை பாா்த்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவா் கடந்த வாரம் கைதுசெய்யப்பட்டாா்.

ஒரே வீட்டை குத்தகைக்கு விடுவது, விற்பனை செய்வது என்ற பெயரில் பலரிடம் அவா் மோசடி செய்தது கண்டறியப்பட்டுள்ளது.

மற்றொரு சொத்து மோசடி வழக்கில் தில்லியில் உள்ள நீதிமன்றம் அவரைத் தேடப்படும் நபராக அறிவித்திருந்தது. அவா் மோசடியாகப் பெற்ற பணத்தைக் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனா் அந்த அதிகாரிகள்.