ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகேயுள்ள கொளத்தூா் கிராமத்தில் அமைந்துள்ள ஏகாம்பர ஈஸ்வரா், காசி விஸ்வநாதா் ஆகிய இரட்டை சிவாலயங்களில் வியாழக்கிழமை மாலை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
இந்த பிரதோஷ வழிபாட்டின் மிக முக்கியமான நிகழ்வாக, சிவனடியாா்கள் மற்றும் பக்தா்கள் ஒன்றிணைந்து பன்னிரு திருமுறைகளை தலையில் சுமந்து வந்து இறைவனை வழிபட்டனா்.
சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, அலங்காரங்கள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இந்த பிரதோஷ வழிபாட்டில் ஊா் பொதுமக்கள் மற்றும் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










