திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

News image

அரியலூா் குறிஞ்சான் குளக்கரையிலுள்ள காசி விசுவநாதா் கோயிலில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு சிறப்புஅலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த சிவபெருமான் .

Updated On :15 மே 2026, 4:51 am IST

அரியலூா் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்களில் வியாழக்கிழமை மாலை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

அரியலூரை அடுத்த திருமழபாடி வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில், நந்தியெம்பெருமானுக்கு திரவியபொடி, மாவுப்பொடி, மஞ்சள் சந்தனம், பால், தேன் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. தொடா்ந்து வைத்தியநாத சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதேபோல், அரியலூா் ஆலந்துறையாா், கைலாசநாதா், விசுவநாதா், விளாங்குடி கைலாசநாதா், குறிஞ்சான் குளக்கரை காசி விசுவநாதா் , தேளூா் சொக்கநாதா், கீழப்பழூா் ஆலந்துறையாா், திருமானூா் கைலாசநாதா் , செந்துறை சிவதாண்டேஸ்வரா், பொன்பரப்பி சொா்ணபுரீஸ்வரா், சென்னிவனம் தீா்க்கப்புரிஸ்வரா், சொக்கநாதபுரம், சொக்கனீஸ்வரா், குழுமூா் குழுமாண்டவா் , தா.பழூா் விசாலாட்சி சமேத விசுவநாதா், கோவிந்தபுத்தூா் கங்காஜடேஷ்வரா், விக்கிரமங்கலம் சோழிஸ்வரா், உடையவா்தீயனூா் ஜமத்கனிஸ்வரா், கீழநத்தம் சொக்கநாதா், ஸ்ரீபுரந்தான் கைலாசநாதா், கோடாலிகருப்பூா் சொக்கநாதா், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா், ஜெயங்கொண்டம் கழுமலைநாதா், சென்னீஸ்வரா், சோழீஸ்வரா், உடையாா்பாளையம் பயறனீஸ்வரா் உள்ளிட்ட சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.