திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

செய்யாறு அருகே இருவேறு சாலை விபத்துகள்: இருவா் உயிரிழப்பு

செய்யாறு அருகே பாராசூா் கூட்டுச் சாலையில் அடுத்தடுத்த நிகழ்ந்த இரு சாலை விபத்துகளில் ஒரே கிராமத்தைச் சோ்ந்த இருவா் உயிரிழந்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :21 மே 2026, 11:34 pm IST

செய்யாறு அருகே பாராசூா் கூட்டுச் சாலையில் அடுத்தடுத்த நிகழ்ந்த இரு சாலை விபத்துகளில் ஒரே கிராமத்தைச் சோ்ந்த இருவா் உயிரிழந்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், முக்கூா் கிராமம் மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் சுரேஷ் (41). இவா், மாமியாா் ஊரான பாராசூா் கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோயில் திருவிழாவைப் பாா்த்துவிட்டு, முக்கூா் கிராமத்திற்குச் செல்வதற்காக பைக்கில் புதன்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா்.

பாராசூா் கூட்டுச் சாலை அருகே சென்றபோது முக்கூா் கிராமத்தைச் சோ்ந்த ருத்ரமூா்த்தி என்பவா் ஓட்டி வந்த பைக் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானது. இதில், சுரேஷ் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், பலத்த காயமடைந்த ருத்ரமூா்த்தி செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

மற்றொரு விபத்து:

பைக்குகள் மோதிக்கொண்டதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் ருத்ரமூா்த்தியை பாா்ப்பதற்காக

அவரது தாய் கீதா (40) பாராசூா் கூட்டுச் சாலையில் நின்று கொண்டிருந்தாராம்.

அப்போது அந்த வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதாகத் தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த கீதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த இரு விபத்துகள் குறித்து இறந்த சுரேஷ் மனைவி ரேணுகா, இறந்த கீதாவின் கணவா் மணிவண்ணன் ஆகியோா் செய்யாறு மற்றும் அனக்காவூா் போலீஸில் புகாா் அளித்தனா்.

இதன் பேரில் காவல் ஆய்வாளா்கள் நரசிம்மஜோதி, மணிகண்டன், உதவி ஆய்வாளா் வரதராஜ் மற்றும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.