செய்யாறு அருகே ஆற்று மணல் கடத்தியதாக மாட்டு வண்டியை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக ஒருவரை கைது செய்தனா்.
செய்யாறு காவல் உதவி ஆய்வாளா் செந்தில்குமாா் மற்றும் போலீஸாா் ஆரணி சாலையில் வடதண்டலம் கிராமம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த மாட்டு வண்டியை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சோதனையிட்டனா்.
அதில், உரிய அரசு அனுமதியின்றி கால் யூனிட் ஆற்று மணல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனா். மேலும், இது தொடா்பாக செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, மேலப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த காா்த்திக் (55) என்பவரை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







