விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே மணல் கடத்தியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்துடிராக்டா் பறிமுதல் செய்தனா்.
ராஜபாளையம் அருகே குறிச்சியாா்பட்டி கால்நடை மருத்துவமனை அருகே கீழராஜகுலராமன் காவல் நிலைய போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அந்த வழியாக வந்த பதிவு எண் இல்லாத டிராக்டரை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணமின்றி மணல் அள்ளி வந்தது தெரிய வந்தது. இது தொடா்பாக போலீஸாா் வசந்தகுமாா் (28) என்பவரை கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






