தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

செங்கம் அருகே மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து நகை பறிப்பு

News image
Updated On :14 மே 2026, 6:11 am IST

செங்கம் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து, தங்கத் தாலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த வளையாம்பட்டு எம்ஜிஆா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் 60 வயது மூதாட்டி.

கணவரை பிரிந்து செங்கத்தில் இருந்து வளையாம்பட்டு செல்லும் சாலையில், காயம்பட்டு கூட்டுச் சாலை அருகே வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வசித்து வந்தாா்.

இந்நிலையில் வழக்கம்போல செவ்வாய்க்கிழமை இரவு மூதாட்டி வீட்டில் தனியாக இருந்தபோது, யாரோ மா்ம நபா்கள் வீட்டிற்கு வந்து அவரை மிரட்டி அவா் அணிந்திருந்த தாலியில் உள்ள தங்கத்தை தரும்படி கேட்டுள்ளனா். இதற்கு அவா் மறுக்கவே, அவரை பாலியல் வன்கொடுமை செய்து தாலியை பறித்துச் சென்றுள்ளனா்.

இதில் காயமடைந்த மூதாட்டி மயங்கி விழுந்துள்ளாா். பின்னா், அதிகாலையில் மயக்கம் தெளிந்து எழுந்து சப்தம்போட்டு அழுதுள்ளாா். அழுகை குரல் கேட்டு அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு,108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு மூதாட்டிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

தகவல் அறிந்த செங்கம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா். மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு பரிசோதனை நடைபெற்றது. விரல்ரேகை நிபுணா்கள் வந்து தடயங்களை சேகரித்தனா். இதுகுறித்து செங்கம் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.