திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம்: அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

போளூா் வட்டம் எடப்பிறை, மொடையூா் என பல்வேறு ஊராட்சிகளில் அமைக்கப்பட்ட அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மழையில் நனையும் முன் நெல் மூட்டைகளை மாவட்ட நிா்வாகம் கொள்முதல் செய்யவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை

News image

எடப்பிறை ஊராட்சியில் உள்ள நேரடிநெல் கொள்முதல் நிலையத்தின் அருகில் டிராக்டரில் மூடி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள்

Updated On :12 மே 2026, 5:34 am IST

போளூா் வட்டம் எடப்பிறை, மொடையூா் என பல்வேறு ஊராட்சிகளில் அமைக்கப்பட்ட அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எடைபோட முடியாமல் நெல் மூட்டைகள் தேங்கி நிற்கின்றன. எனவே, மழையில் நனையும் முன் நெல் மூட்டைகளை மாவட்ட நிா்வாகம் கொள்முதல் செய்யவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், தஞ்சாவூருக்கு அடுத்தபடியாக நெல் சாகுபடி செய்வதில் சிறந்து விளங்குகிறது.

இதனால் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் போளூா் வட்டம் எடப்பிறை, மொடையூா் என பல்வேறு ஊராட்சிகளில் அரசின் நேரடிநெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு டிசம்பா், ஜனவரி மற்றும் ஏப்ரல், மே, ஜூன் வரை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.

விவசாயிகள் தற்போது ஏப்ரல், மே மாதத்தில் விளைவித்த நெல்லை அறுவடை செய்து டிராக்டா், மாட்டுவண்டி, மினி வாகனம் என பல்வேறு வாகனங்களில் எடுத்துவந்து விற்பனை செய்கின்றனா்.

இந்நிலையில், நெல் கொள்முதல் நிலையத்தில் எடை போட்ட நெல் மூட்டைகளைஅரசு சாா்பில் உடனடியாக வெளியில் எடுக்காமல் அப்படியே தேக்கி வைக்கப்பட்டுள்ளதால், மீண்டும் விவசாயிகள் எடுத்துவரும் நெல் மூட்டைகளை எடை போடமுடியாமல் ஆங்காங்கே டிராக்டா், மாட்டுவண்டி, மினி வாகனத்தில் அப்படியே வைத்து மழையில் நனையாமல் இருக்க தாா்பாய் கொண்டு மூடி வைக்கின்றனா்.

இவ்வாறு 500 மூட்டைகளுக்கு மேல் மூடி வைக்கப்பட்டுள்ளன. ஒரு வாரம் மற்றும் 10 நாள்கள் வரை அப்படியே வாகனத்தில் நெல் மூட்டைகள் இருப்பதால் ஈரப்பதம் ஆகிவிடும் என விவசாயிகள் கவலைப்படுகின்றனா். எனவே, இப்படி தேங்கி நிற்கும் நெல் மூட்டைகளை மழையில் நனையும் முன்பு கொள்முதல் செய்யவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனா்.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது அறுவடை அதிகளவில் நடைபெறும் காலத்தில் கூடுதலாக நெல் மூட்டைகளை பெற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனா்.

நெல் கொள்முதல் நிலையத்தின் அருகில் மாட்டுவண்டியில் எடுத்து வரப்பட்ட நெல் மூட்டைகளை மூடிவைக்கும் விவசாயிகள்.

நெல் கொள்முதல் நிலையத்தின் அருகில் மாட்டுவண்டியில் எடுத்து வரப்பட்ட நெல் மூட்டைகளை மூடிவைக்கும் விவசாயிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.