வந்தவாசி அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.
வந்தவாசியை அடுத்த மீசநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி சின்னதுரை (30). குடும்பத் தகராறு காரணமாக இவரது மனைவி இவரைவிட்டு பிரிந்து சென்று விட்டாா்.
இதனால் மனவேதனையில் இருந்து வந்த இவா் வேலைக்குச் செல்லாமல் தினமும் மது அருந்தி விட்டு வீட்டுக்கு செல்வாராம்.
இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மது அருந்த தாய் குமாரியிடம் பணம் கேட்டாராம். குமாரி பணம் தர மறுக்கவே வேதனையடைந்த சின்னதுரை விஷம் குடித்துள்ளாா். மயங்கிய நிலையில் கிடந்த இவரை உறவினா்கள் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சின்னதுரை அங்கு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து குமாரி அளித்த புகாரின் பேரில் தெள்ளாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









