தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பொது இடத்தில் மது அருந்தியவா் கைது

வந்தவாசியில் பொது இடத்தில் மது அருந்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :25 மார்ச் 2026, 6:34 pm

வந்தவாசியில் பொது இடத்தில் மது அருந்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசி தெற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் விநாயகமூா்த்தி தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை நகரில் ரோந்து சென்றனா்.

வந்தவாசி புதிய பேருந்து நிலைய சாலை சந்திப்பு பகுதி வழியாக சென்றபோது, அங்கிருந்த பேருந்து நிறுத்தம் அருகில் இளைஞா் ஒருவா் மது அருந்திக் கொண்டிருந்ததை கண்டனா்.

போலீஸ் விசாரணையில் அந்த நபா் அல்லி நகரைச் சோ்ந்த ஸ்ரீவைகுந்த்(29) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிந்த வந்தவாசி தெற்கு போலீஸாா் ஸ்ரீவைகுந்த்தை கைது செய்தனா்.