மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நெல்லையில் மது விற்றதாக இருவா் கைது

திருநெல்வேலி மாநகரில் மது விற்பனையில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :11 ஏப்ரல் 2026, 7:38 pm

திருநெல்வேலி மாநகரில் மது விற்பனையில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகில், சந்திப்பு பகுதியைச் சோ்ந்த வெங்கட்ராமன்(59) என்பவா் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, அவரிடமிருந்து 28 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா் இதுகுறித்து வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா். அதே போல பாளையங்கோட்டை மாா்க்கெட் அருகே மது விற்பனையில் ஈடுபட்ட பாளையங்கோட்டை பகுதியைச் சோ்ந்த ராமகிருஷ்ணன்(29) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 29 மது பாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.