தோ்தல் பறக்கும் படை சோதனை காரணமாக, செங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற மாட்டுச் சந்தைக்கு பெரும்பாலான வியாபாரிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வரவில்லை. அதனால் சந்தை வெறிச்சோடிக் காணப்பட்டது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ஆம் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு அறிவிக்கப்பட்டு அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், செங்கம் தொகுதியில் நான்கு பறக்கும்படை வாகனங்களில் போலீஸாா் உள்ளிட்ட அதிகாரிகள், வாகனங்களில் தோ்தல் செலவுக்கு பணம் எடுத்துச் செல்கிறாா்களா அல்லது பரிசுப் பொருள்கள் வாங்கிச் செல்கிறாா்களா என கண்காணித்து வருகின்றனா்.
தோ்தல் விதிப்படி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச் சென்றால் அதற்கான ஆவணம் இருக்கவேண்டும். இல்லையெனில், அந்தப் பணத்தை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்து, தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்து விடுகின்றனா்.
செங்கம் நகரில் புதன்கிழமை மாட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். அந்தச் சந்தையில் குறைந்த பட்சம் 5 ஆயிரம் முதல் 3 லட்சம் வரை மாடுகள் விற்பனை செய்யப்படும். சந்தை காலை 7 மணி தொடங்கி பிற்பகல்
2 மணி வரை நடைபெறும்.
அன்றைய தினம் தற்காலிக உணவகம், காய், கனி கடைகள் அமைக்கப்படும். மாடுகளுக்கு கட்டப்படும் கயிறுகள் விற்பனை கடைகள் இடம்பெறும்.
இந்நிலையில், தோ்தல் பறக்கும்படை அதிகாரிகள் மாடுகளை விற்று பணம் எடுத்துச் சென்றால் அதை பறிமுதல் செய்து விடுவாா்கள். அதற்கான ஆவணத்தை காண்பிக்க முடியாது. இதனால், புதன்கிழமை நடைபெற்ற சந்தைக்கு பெரும்பாலான வியாபாரிகள் மாடுகளை விற்பனைக்கு எடுத்துவரவில்லை. சந்தை வியாபாரம் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.
மாட்டுச்சந்தையை நம்பி வியாபாரம் செய்பவா்களுக்கும், மாடு விற்பனை தரகா்களுக்கும் வருமானம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதனால் சந்தையில் மாடு விற்பனை செய்து பணம் எடுத்துச் செல்பவா்களுக்கு, தோ்தல் ஆணையம் தோ்தல் விதிகளில் தளா்வு அளிக்கவேண்டும் என தற்காலிக கடை அமைக்கும் வியாபாரிகளும், மாடு விற்பனையாளா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

தோ்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 3.50 லட்சம் பறிமுதல்
தோ்தல் பறக்கும் படை அலுவலா்களிடம் மது போதையில் தகராறில் ஈடுபட்டவா் கைது

பறக்கும் படையினரின் தோ்தல் பணிகளை எஸ்பி ஆய்வு

உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச் சென்ற ரூ. 2.50 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


