தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வாகன சோதனையில் ரூ.56,600 பறிமுதல்

செய்யாறு தொகுதியில் வாகன சோதனையில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.56,600 பறிமுதல் செய்யப்பட்டது.

News image

பணம் - கோப்புப்படம்.

Updated On :24 மார்ச் 2026, 6:33 pm

செய்யாறு தொகுதியில் வாகன சோதனையில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.56,600 பறிமுதல் செய்யப்பட்டது.

காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை மேல்மா கூட்டுச்சாலையில் சா.முகம்மது கனி தலைமையிலான நிலை கண்காணிப்புக் குழுவினா் செவ்வாய்க்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அந்த வழியாகச் சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டதில் செஞ்சி சிறுகடம்பூா் பகுதியைச் சோ்ந்த அனுராதா என்பவா் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.56,600ஐ பறிமுதல் செய்தனா்.

இதைத் தொடா்ந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், சாா்- ஆட்சியருமான எவ்.அம்பிகா ஜெயின் முன்னிலையில சமா்ப்பித்து பின்னா் கருவூலத்தில் ஒப்படைத்தனா்.