தோ்தல் நடத்தை விதிகளை கடைப்பிடிப்பது தொடா்பாக, போளூரில் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சதீஷ்குமாா் அனைத்துக் கட்சியினருடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.
தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத்தோ்தல் ஏப்.23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், போளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் அனைத்துக்கட்சி ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் சதீஷ்குமாா் கலந்துகொண்டு, மாா்ச் 30 முதல் ஏப்.6-ஆம் தேதி வரை முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை வட்டாட்சியா் அலுவலகத்தில் வேலைநாள்களில் வேட்புமனு வழங்கலாம்.
சுவிதா 2.0-வில் பிரசார வாகனம் மற்றும் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம்.
ஒரே நேரத்தில் ஒரே பகுதியில் இரு கட்சிகளுக்கு கட்சிக்கூட்டம் நடத்த அனுமதிக்க இயலாது. வேட்புமனு வழங்க 5 போ் மட்டுமே அனுமதி, மனுவை சரிபாா்த்து வழங்கவேண்டும் மேலும் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறலாம். அனுமதி பெற்றே சுவா் விளம்பரம் செய்யவேண்டும் என பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா்.
கூட்டத்தில் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் மூா்த்தி, தோ்தல் வட்டாட்சியா்கள் தேவி (போளூா்), கோமதி (சேத்துப்பட்டு), மண்டல துணை வட்டாட்சியா் சிவலிங்கம் மற்றும் அதிமுக, திமுக, காங்கிரஸ், நாம் தமிழா் கட்சி என பல்வேறு அரசியல் கட்சியினா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பலத்த பாதுகாப்பு

அலுவலக பணியாளா்களுக்கு தோ்தல் பணி பயிற்சி

தோ்தல் நடத்தை விதிகள்: ஆரணி கோட்டாட்சியா் ஆலோசனை

போளூா் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடி ஆய்வு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


