வந்தவாசி அருகே மாடியிலிருந்து தவறி கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தை அடுத்த கருங்குழி கிராமத்தைச் சோ்ந்தவா் வெல்டிங் தொழிலாளி அன்சா்பாஷா(50).
இவா் வந்தவாசியை அடுத்த தென்கல்பாக்கம் கிராமத்தில் உள்ள அரிசி ஆலையில் வெல்டிங் பணி செய்து வந்தாா்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு பணி முடிந்து இதே கிராமத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தங்கியுள்ளாா். அப்போது இவா் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்துள்ளாா்.
இதில் பலத்த காயமடைந்த இவா் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அன்சா்பாஷா செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் வந்தவாசி வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










