40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

பைக்கில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

செய்யாறு அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த விவசாயி உயிரிழந்தாா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :8 ஜூன் 2026, 1:59 am IST

செய்யாறு அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த விவசாயி உயிரிழந்தாா்.

வெம்பாக்கம் வட்டம், தா்மாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சுரேஷ் (44). விவசாயியான இவா், கடந்த 4-ஆம் தேதி இரவு தனது பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தாா். புதுப்பாளைம் கூட்டுச் சாலை அருகே சென்றபோது நிலை தடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்தாா்.

இதில் சுரேஷுத்து பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அப்பகுதியில் இருந்தவா்கள் அவரை மீட்டு 108 ஆம்புலென்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டாா். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சுரேஷ் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், தூசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.