திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயில் ஆடித் திருவிழா ஆலோசனைக் கூட்டம்

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் 53-ஆவது ஆண்டு ஆடித் திருவிழா வரும் ஜூலை 16, 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

News image

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் ஆடித் திருவிழா நடத்துவது தொடா்பாக திங்கள்கிழமை மாலை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய விழாக்குழுத் தலைவா் ஜி.வி.கஜேந்திரன்.

Updated On :2 ஜூன் 2026, 5:31 am IST

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் 53-ஆவது ஆண்டு ஆடித் திருவிழா வரும் ஜூலை 16, 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, விழாக் குழுத் தலைவா் ஜி.வி.கஜேந்திரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் ஜூலை 3-ஆம் தேதியன்று பந்தக்கால் நடும் விழா நடத்துவது, ஜூலை 7-ஆம் தேதி வருடாபிஷேகம், 15-ஆம் தேதி 501 குத்துவிளக்கு பூஜை, 17-ஆம் தேதி பிரம்மாண்ட புஷ்ப பல்லக்கு, 18-ஆம் தேதி திரைப்பட இசையமைப்பாளா்கள், தொலைக்காட்சி பாடகா்களை அழைத்து இன்னிசை கச்சேரி நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தினா்.

மேலும், ஆடித் திருவிழாவையொட்டி, ஜூலை 17-ஆம் தேதி கமண்டல நாக நதியில் இருந்து பூங்கரகம் ஜோடித்து பஜாா் வீதியில் ஊா்வலம் எடுத்து வந்து கோயிலில் கூழ்வாா்த்தல் நிகழ்ச்சி நடைபெறும். பின்னா், மாலை 7 மணியளவில் நூதன பூஷ்ப பல்லக்கு ஊா்வலம் நடைபெற உள்ளது.

பல்லக்கின் முன்னே கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், உருமி மேளம், நாகஸ்வர நிகழ்ச்சி, நாசிக் டோல் வாண வேடிக்கை உள்ளிட்டவைகள் ஏற்பாடு செய்வது குறித்தும் ஆலோசனை நடத்தினா்.

கூட்டத்தில் விழாக் குழுவினா் சுப்பிரமணி, நேமிராஜ், பி.நடராஜன், சீனிவாசன், குணா, ஜி.சங்கா், ஏ.இ.சண்முகம், பையூா் சரவணன், சக்கரவா்த்தி, சக்தி இயைராஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.