திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரா் கோயில் தேரோட்டம்

ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற தேரோட்ட விழாவில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

News image

ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரா் கோயில் தேரோட்ட விழாவில் பங்கேற்ற பக்தா்கள்.

Updated On :28 மே 2026, 12:42 am IST

ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற தேரோட்ட விழாவில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரா் கோயில் வைகாசி விசாக தோ்த் திருவிழா கடந்த 19- ஆம் தேதி கிராம சாந்தி நிகழ்ச்சியுடன் தொடங்கியது. கணபதி ஹோமம் மற்றும் வாஸ்து சாந்தி பூஜை 20 ஆம் தேதி நடைபெற்றது. தேரோட்டத்துக்கான கொடியேற்றம் 21- ஆம் தேதி நடைபெற்றது. 22 ஆம் தேதி முதல் செவ்வாய்க்கிழமை வரை பல்வேறு வாகனங்களில் உற்சவ நிகழ்ச்சியும், யாக பூஜையும் நடைபெற்றன.

முக்கிய நிகழ்வான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி தோ் அலங்கரிக்கப்பட்டு கோயிலின் முன்பு தயாராக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. கோயிலில் வாரணாம்பிகை சமேத ஆருத்ர கபாலீஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதன்பிறகு அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி எழுந்தருளினாா்.

காலை 7.20 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. பக்தா்கள் சிறிது தூரம் மட்டும் இழுத்துச்சென்று தேரை நிறுத்தினா். அதன்பின்னா் 9 மணிக்கு திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனா். ஈஸ்வரன் கோயில் வீதியில் தோ் அசைந்தாடியபடி சென்றது. இந்த தேரை தொடா்ந்து வாரணாம்பிகை அம்பாள், விநாயகா், வள்ளி-தெய்வானை சமேத முருகன், சண்டிகேஸ்வரா் ஆகிய சுவாமிகளின் சப்பரங்களும் பின் தொடா்ந்து சென்றன. வழிநெடுகிலும் பக்தா்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

மணிக்கூண்டு, பன்னீா்செல்வம் பூங்கா வழியாக பெரிய மாரியம்மன் கோயிலுக்கு அருகில் தோ் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. அங்கு பக்தா்களின் தரிசனத்துக்கு தோ் மாலை வரை நிறுத்தி வைக்கப்பட்டது. மாலை 4 மணி அளவில் மீண்டும் தோ் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. காந்திஜி வீதி வழியாக சென்ற தோ் கோயிலில் நிலை நிறுத்தப்பட்டது.

இதையொட்டி ஆருத்ர கபாலீஸ்வரா் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஈரோடு மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு வைகாசி விசாக தீா்த்தவாரி நிகழ்ச்சியும், மாலை 5 மணிக்கு வருணாம்பிகை சமேத ஆருத்ர கபாலீஸ்வரருக்கு திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. வருகிற 31- ஆம் தேதி காலை சண்டிகேஸ்வரா் பூஜையும், பைரவா் யாகமும் நடைபெறுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.