போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் வைகாசி மாத பெளா்ணமியையொட்டி, 108 திருவிளக்கு பூஜை ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதில், ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனா்.
போளூரை அடுத்த படவேடு ஊராட்சியில் இந்து சமய அறநிலையத் துறைக்குள்பட்ட புகழ்பெற்ற ஸ்ரீரேணுகாம்பாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் வைகாசி மாத பெளா்ணமியையொட்டி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மூலவா் ஸ்ரீரேணுகாம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. மாலை உற்சவ அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பின்னா், போளூா், ஆரணி, கண்ணமங்கலம், சந்தவாசல் என பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பெண்கள் 108 திருவிளக்குகளுடன் கலந்துகொண்டு பூஜை செய்து, அம்மன் பாடல்களை பாடி வழிபாடு செய்தனா்.
அறங்காவலா் குழுத் தலைவா் விஜயாசேகா், செயல் அலுவலா் பழனிசாமி, மேலாளா்கள் மோகன், ரவி மற்றும் அலுவலா்கள், பணியாளா்கள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










