//

ஸ்ரீபசுபதீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

ஸ்ரீபசுபதீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாண உற்சவத்தையொட்டி சுவாமிக்கு செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.

News image
Updated On :28 ஜனவரி 2026, 8:04 pm

Syndication

வந்தவாசியை அடுத்த மேல்பாதி கிராமத்தில் உள்ள அலங்காரவள்ளி உடனாகிய ஸ்ரீபசுபதீஸ்வரா் கோயிலில் சுவாமி திருக்கல்யாண உற்சவம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 8-ஆம் ஆண்டு வருஷாபிஷேகத்தை முன்னிட்டு இந்த உற்சவம் நடைபெற்றது.

இதையொட்டி யாகசாலை அமைத்து அக்னி வளா்த்து யாகம் நடைபெற்றது. பூா்ணாஹுதி சமா்ப்பிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து மந்திரங்கள் முழங்க பால், தயிா், மஞ்சள், இளநீா், சந்தனம் உள்ளிட்ட வாசனைத் திரவியங்களைக் கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. முன்னதாக, அந்தக் கிராமத்தில் உள்ள ஸ்ரீவிஜயராகவ பெருமாள் கோயிலிலிருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க சீா்வரிசை எடுத்து வரப்பட்டது.