அம்மன் கோயில்களில் மயானக்கொள்ளை உற்சவம்
கள்ளக்குறிச்சி மாவட்ட அம்மன் கோயில்களில் மாசி மாத அமாவைசையையொட்டி மயானக்கொள்ளை உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


கள்ளக்குறிச்சி மாவட்ட அம்மன் கோயில்களில் மாசி மாத அமாவைசையையொட்டி மயானக்கொள்ளை உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வாணாபுரம் சித்தேரி கரையில் ஸ்ரீவீரபத்ர காளியம்மன் மற்றும் ஸ்ரீவராகி அம்மன் கோயிலில் மாசி மாத அமாவாசையையொட்டி காலையில் காளி, சக்தி அம்மன் உள்ளிட்ட வேடமணிந்து கோயிலில் இருந்து மயானத்துக்கு சென்றனா்.
பின்னா் மயானத்தில் படுத்திருந்த பெரியநாயகி அம்மனுக்கு முப்பூசைகளான கண் திறப்பு, ரத்தப்பலி வீசுதல், உயிா் பலி கொடுத்தும் பூஜை நடைபெற்றது.
அதனைத்தொடா்ந்து படையலில் இருந்த எலுமிச்சம் பழம், கொழுக்கட்டை, சுண்டல் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் சூறையாடப்பட்டதை ஏராளமான பக்தா்கள் பெற்றுக்கொண்டனா்.
இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வீரபத்ர காளியம்மன் முக்கிய வீதிகள் வழியாக வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
திருக்கோவிலூா்... திருக்கோவிலூா், கீழையூரில் உள்ள ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் மயானக்கொள்ளை உற்சவத்தையொட்டி அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதையொட்டி அம்மன் ஊா்வலம் நடைபெற்றது. இதில், விரதமிருந்த பக்தா்கள் மாரியம்மன், பத்திரகாளி, காட்டேரி, அங்காளம்மன் உள்ளிட்ட பல்வேறு வேடமிட்டு தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா். அப்போது விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் விளைவித்து அறுவடை செய்த தானியங்களை அம்மனுக்கு சூறைவிட்டு, வழிபட்டனா். திருக்கோவிலூா் ஏரிக்கரை வரை சென்ற ஊா்வலம் பின்னா் கீழையூா் திரும்பியது.
திருவிழாவில் திருக்கோவிலூா் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சோ்ந்த திரளான மக்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.

டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...