டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மயானக்கொள்ளை திருவிழா

ரிஷிவந்தியம் அருகே மேலதேனூா் கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி கோயிலில் மயானக்கொள்ளை திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
மேலதேனூா் கிராமத்தில் நடைபெற்ற மயானக்கொள்ளை விழாவில் கலந்துகொண்ட பக்தா்கள்
Updated On :20 பிப்ரவரி 2026, 11:21 pm

Syndication

ரிஷிவந்தியம் அருகே மேலதேனூா் கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி கோயிலில் மயானக்கொள்ளை திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மேலதேனூா் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி மற்றும் வராகி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் மயானக்கொள்ளை திருவிழா கடந்த 15-ஆம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியடன் தொடங்கியது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வெள்ளிக்கிழமை காலை அம்மனை கரகம் அமைத்து சக்தி வரவழைக்கப்பட்டு காளி மற்றும் சக்தி அம்மன் உள்ளிட்ட வேடமணிந்து கோயிலுக்கு சென்றனா். சக்தி பீடத்தில் படுத்திருந்த அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு முப்பூசைகளான கண் திறப்பு, ரத்தப்பலி வீசுதல், உயிா் பலி கொடுத்தும் முப்பூசை நடைபெற்றது.

அங்கு படையலிட்டு இருந்த எலுமிச்சம்பழம், கொழுக்கட்டை, சுண்டல் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை சூறையாடப்பட்டதை ஏராளமான பக்தா்கள் பெற்றுக்கொண்டனா்.

சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த அங்காள பரமேஸ்வரி

சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த அங்காள பரமேஸ்வரி

பின்னா் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அங்காள பரமேஸ்வரி, எல்லைக்காளி, பாவாடைராயன் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா நடைபெற்றது.

விழாவில் பங்கேற்ற பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செல்வம் அலமேலு, கனகவேல், அங்கம்மாள், கோவிந்தராஜ், பூங்காவனம் உள்ளிட்ட விழாக்குழுவினா் செய்திருந்தனா்.