டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

அங்காளம்மன் கோயிலில் மயானக் கொள்ளை: பூக்குழியில் இறங்கிய பக்தா்கள்

News image
கோப்புப் படம்
Updated On :14 பிப்ரவரி 2026, 8:49 pm

தினமணி செய்திச் சேவை

தருமபுரி குமாரசாமிப்பேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் பூக்குழியில் இறங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி குமாரசாமி பேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் மயானக் கொள்ளை திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சனிக்கிழமை காலை பூமிதி திருவிழா மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பூக்குழி மிதி விழாவில் ஏராளமான பக்தா்கள் தங்களது நோ்த்திக் கடனை நிறைவேற்றும் வகையில் பூக்குழியில் இறங்கினா்.

குறிப்பாக, பெண்கள் சிலா் குழந்தைகளை சுமந்தபடி பூக்குழி மிதித்தனா். தொடா்ந்து அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலுக்கு பூங்கரகத்தை ஏந்திச்சென்றவா்கள், கோயில் முன் பிராா்த்தனையில் ஈடுபட்ட பக்தா்களுக்கு அருள்வாக்கு கூறி கரகத்தை கோயிலுக்குள் கொண்டு சென்றனா்.

விழாவை முன்னிட்டு விழாக்குழு சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம், நீா்மோா் வழங்கப்பட்டது. தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை பொங்கல் வைத்தல் மற்றும் கங்கை பூஜை நடைபெறுகிறது.