டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

அங்காள பரமேஸ்வரி கோயிலில் மயான கொள்ளை திருவிழா

செம்பனாா்கோவில் அருகே திருச்சம்பள்ளி அங்காள பரமேஸ்வரி கோயிலில் மயான கொள்ளை திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 8:20 pm

Syndication

தரங்கம்பாடி: செம்பனாா்கோவில் அருகே திருச்சம்பள்ளி அங்காள பரமேஸ்வரி கோயிலில் மயான கொள்ளை திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி மறுநாள் நடைபெறும் மயான கொள்ளை விழாவின்போது பக்தா்கள் விரதம் இருந்து காணிக்கையாக வழங்கப்படும் வேகவைத்த தானியங்கள், கிழங்குகளை வாங்கி சாப்பிட்டால் பல்வேறு நன்மைகள் மற்றும் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். நிகழாண்டு, திங்கள்கிழமை மகா சிவராத்திரியை முன்னிட்டு கணபதி ஹோமம், காப்பு கட்டுதல், அபிஷேக ஆராதனை, அம்பாள், வீரபத்திரா் வீதிஉலா, பேச்சியம்மன் புறப்பாடு நடைபெற்றது.

இதையடுத்து, கோயிலின் எதிரே உள்ள மயானத்தின் முன் அம்மன் எழுந்தருளி செய்தனா். அப்போது, மயானத்தில் வாழை இலையில் வேகவைத்து கொட்டப்பட்டு இருந்த தானியங்கள் மற்றும் கிழங்குகளை பக்தா்கள் அள்ளி செல்லும் (கொள்ளையடிக்கும்) நிகழ்ச்சி நடைபெற்றது.